இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ரத்து

0 20893

கொரோனா அச்சம் காரணமாக இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மான்செஸ்டரில் இன்று பிற்பகலில் 5-வது டெஸ்ட் போட்டி தொடங்க இருந்த நிலையில், இந்திய அணியின் பிசியோ தெரபிஸ்ட் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால், போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

போட்டியை தள்ளிவைக்கலாமா என்பது குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஆலோசனை நடத்திய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இந்திய வீரர்கள் விளையாட தயக்கம் காட்டியதால் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments