7 அடி ஆழமுள்ள குறுகிய குழிக்குள் சிக்கிய ஆட்டுக்குட்டி... தந்தையின் உதவியுடன் தலைகீழாக ஊர்ந்து சென்று காப்பாற்றிய சிறுவன்... குவியும் பாராட்டு..!

0 2659

நியூசிலாந்தில் 7 அடி ஆழமுள்ள குழிக்குள் விழுந்த ஆட்டுக்குட்டியை தந்தையும், மகனும் காப்பாற்றிய வீடியோ பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

வெய்ட்டோமோ என்ற இடத்தில் பெரிய பாறைக்கு அடியில் உள்ள 7 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிறிய ஆட்டுக்குட்டி சிக்கிக் கொண்டது. இதனைக் கண்ட 14 வயதான கோர்பான் டெனிஸ் என்ற சிறுவனும் அவனது தந்தையும் அதனைக் காப்பாற்ற முயன்றனர்.

இதற்காக கோர்பான் தலைகீழாக குழிக்குள் ஊர்ந்து சென்றார். பின்னர் ஆட்டுக்குட்டியைப் பிடித்த பின்னர் கோர்பானின் தந்தை அவனது கால்களைப் பிடித்து இழுக்க கோர்பானும், ஆட்டுக்குட்டியும் நலமாய் வெளிவந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments