கே.ஜி.எப்பில் ஈவ்டீசிங்..! கேடிகள் அட்டூழியம்..! 10 பேருக்கு மண்டை உடைந்தது..!

0 3555
கே.ஜி.எப்பில் ஈவ்டீசிங்..! கேடிகள் அட்டூழியம்..! 10 பேருக்கு மண்டை உடைந்தது..!

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் அருகே பேருந்து நிலையத்தில் பெண்ணை கிண்டல் செய்ததோடில்லாமல், தட்டிக்கேட்டவர்களை சாதியின் பெயரால் மர்மகும்பல் அடித்து மண்டையை உடைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோவினஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலைக்கு செல்லும் போது கடந்த 4 மாதமாக ஒரு இளைஞன் வாடிக்கையாக கிண்டல் செய்து வந்துள்ளான். இது தொடர்பாக அந்த பெண் தனது வீட்டில் சொன்னதால், சம்பவத்தன்று காலையில் கிண்டல் செய்த இளைஞரை அழைத்து பெண்ணின் உறவினர்கள் எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

அதற்கு தான் அப்படித்தான் கிண்டல் செய்வேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று சவால் விட்டுச்சென்ற அந்த அடடாவடி இளைஞன், சாதியை காரணம் காட்டி தனது உறவினர்கள மற்றும் நண்பர்களை, அந்த பெண்ணுக்கு எதிராக திரட்டிவந்ததாக கூறப்படுகின்றது. மாலையில் அந்த பெண் வேலை முடிந்து திரும்பியபோது வலிய சென்று வம்பிழுத்து, தனது வீட்டு பெண்களை விட்டு அந்த பெண்ணையும், பாதுகாப்புக்கு வந்த சகோதரியையும் கடுமையாக தாக்க செய்துள்ளான்.

அப்போது ஈவ்டீசிங்கை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களை, சூழ்ந்துகொண்டு கம்புகளால் கடுமையாக அடித்து மண்டையை உடைத்துள்ளனர்.சாதியின் பெயரால் கேஜிஎப்பில் நடந்த இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் இரு பெண்கள் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக கோலார் தங்கவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண்ணை கேலியும் செய்துவிட்டு, அதனை தட்டிக்கேட்டவர்களை, ஆதரவாளர்களை அழைத்து வந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments