ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ; நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை

0 2690
வாக்குவாதத்தின் போது நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நாற்காலிகளை தூக்கி வீசியதால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை , ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசு ஒதுக்கிய ஒரு கோடியே ஒரு கோடியே 26 லட்சம் நிதியில், ஒவ்வொரு ஒன்றிய வார்டுகளுக்கும் பணிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், திமுகவிற்கு மாறுவதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சிக்கு செல்லலாம் என கூறினார்.

இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறிய பிள்ளையார்நத்தம் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் நாற்காலியை கூட்டத்தில் தூக்கி வீசினார். அவருக்கு ஆதரவாக சிலுக்குவார்பட்டி பாமக ஒன்றிய கவுன்சிலர் நாகராஜனும் நாற்காலியை தூக்கி வீசினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments