டிசைன் செய்வதாக கூறி வாங்கிச் சென்ற 350 கிராம் தங்க நகைகள் அபேஸ்..!

0 2654

கோவையில், தங்க நகைகளுக்கு டிசைன் செய்வதாக கூறி உரிமையாளரிடம் வாங்கி சென்ற 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடையர் வீதி பகுதியை சேர்ந்த கோபால், தங்க நகைகளை தயார் செய்து, அங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி, இவரிடம் இருந்து, டிசைன் செய்வதற்காக 350 கிராம் தங்க நகைகளை முருகேசன் என்பவர் வாங்கி சென்றுள்ளான்.

ஆனால் நகைகளை திருப்பி தராமல் அலைக்கழித்த முருகேசனிடம் கேட்டபோது, நண்பர்களுடன் சேர்ந்து நகை உரிமையாளர் கோபாலை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments