பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

0 3199

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

எஸ்எச்6 என்னும் பிரிவில் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் கை மான் சூ ஆகியோர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் 21க்கு 17, 16க்கு 21, 21க்கு 17 என்கிற செட் கணக்கில் இந்திய வீரர் வெற்றிபெற்றுத் தங்கப் பதக்கம் வென்றார்.

இதனால் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணா நாகருக்கு டுவிட்டரில் வாழ்த்துக் கூறியுள்ள பிரதமர் மோடி, நமது பேட்மின்டன் வீரர்களைப் பார்த்து மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments