ஆப்கானிஸ்தான் நிலவரம்- எதிர்கால நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

0 1917

ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றியதை அடுத்து, அதனை கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைத்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் தற்போதைய நிலவரம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த ஆப்கான் யுத்தம், தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முடிவடைந்தது. அமெரிக்கப் படை கடந்த 31ந் தேதியுடன் அங்கிருந்து முழுமையாக வாபஸ் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் பட்டேலை, தோஹாவில் உள்ள தாலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள முகமது அப்பாஸ் ஸ்டானக்சாய் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தாலிபான் பிரதிநிதி, பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆப்கானிஸ்தானால் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல், தீவிரவாதம், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments