9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் - தமிழ்நாடு அரசு

0 46086
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், நேரடி வகுப்புகளுக்கு வராமல் ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிகள் அனுமதி தர வேண்டும். பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை பயன்படுத்தக் கூடாது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளை திறக்கக் கூடாது. கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது.

விளையாட்டு மற்றும் இறைவணக்கக் கூட்டங்கள் நடத்தக் கூடாது, வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments