மகளுடன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை : மகள் உயிரிழப்பு, தந்தைக்கு தீவிர சிகிச்சை

0 2792

சேலத்தில் மனநிலை பாதித்த மகளுடன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை காப்பாற்றப்பட்ட நிலையில், மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோரிமேட்டைச் சேர்ந்த தியாகராஜனின் 4 பிள்ளைகளில் 3 பிள்ளைகளுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், 20 வயதான கடைசிப் பெண் ஹரிஷ்கா மனநிலை பாதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மகளின் நிலையை எண்ணி மன உளைச்சலில் இருந்த தியாகராஜன், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் ஹரிஷ்காவுக்கு எலி மருந்தைக் கொடுத்து சாப்பிடவைத்து, தானும் அதனை சாப்பிட்டுள்ளார்.

இதில் ஹரிஷ்கா உடனடியாக மயங்கி விழுந்து உயிரிழந்துவிட, உயிருக்குப் போராடிய தியாகராஜன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்கொலைக்குத் தூண்டுதல் உட்பட இரு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments