100 நாட்களில் முதலீட்டுப் பணம் இரட்டிப்பாகும் எனக்கூறி மோசடி...ஒருவர் கைது

0 1534

சென்னையில் 100 நாட்களில் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியவன் சிக்கினான்.

ஆவடியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் ஏஞ்சல் டிரேடிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வருபவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இணையதளம் மூலம் விளம்பரம் செய்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே 50 லட்சம்  ரூபாய் வரை ஏமாற்றிய கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தியாக பிரகாசம் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments