இரண்டு சரக்கு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய 2 கார்கள் ; வைரலாகப் பரவிய கண்காணிப்பு கேமரா காட்சிகள்

0 1890
இரண்டு சரக்கு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கிய 2 கார்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரண்டு சரக்கு லாரிகள் இரண்டு கார்கள் நாக்கப்பள்ளி ஜங்சன் அருகே மோத இருந்த பெரும் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டது. இரண்டு கார்களுக்கு முன்னால் வேகமாக சென்றுக் கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் இரண்டு கார்களும் திடீரென நின்றன.

கார்களுக்குப் பின்னால் வந்த இன்னொரு சரக்கு லாரி கார்கள் மீது மோதி நின்றது. இரண்டு கார்களும் இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி நசுங்கி சேதம் அடைந்தன.இருந்தாலும் அதில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments