கொடுக்கல் வாங்கலில் தகராறு... நண்பரை உயிருடன் புதைக்க முயன்ற சக நண்பர்கள்

0 1539

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை உயிரோடு குழியில் புதைக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெயிண்டர் அஜித்குமாருக்கும், சக நண்பர்கள் 3 பேருக்கும் மது போதையில் கொடுக்கல் வாங்கல் குறித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடனாக வழங்கிய 5 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கேட்ட ஆத்திரத்தில் சக நண்பர்கள் சேர்ந்து அஜித்குமாரை கத்தியால் தாக்கி, உயிரோடு புதைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அஜித்குமார் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்த நிலையில், நண்பர்கள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் .  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments