ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி முகாமில் தகராறு செய்ததாக அதிமுக நிர்வாகி கைது

0 2234

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கொரோனா தடுப்பூசி முகாமில் தகராறு செய்ததாக அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 14-ந் தேதி வெள்ளக்கோயில்பாளையத்தில் நடந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.

அப்போது, இளங்கோ என்பவர் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் வந்து நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக கூறி தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு இளங்கோவை தகாத வார்த்தையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சுப்பிரமணியம் பேசியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments