தற்போதைய சூழலில் 3 ஆம் டோஸ் தேவையில்லை: டெல்லி எய்ம்ஸ் தலைவர்

0 3258

தற்போதுள்ள சூழலில் இந்தியாவில் 3 வது டோஸ் தடுப்பூசி அவசியமில்லை என்று டெல்லி எய்ம்ஸ் தலைவர் Dr.ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், ஆனால் ஒரு காலத்தில் அதற்கான தேவை நிச்சயம் வரும் எனவும் கூறினார்.  3 ஆவது பூஸ்டர் டோசாக எந்த தடுப்பூசியை போடலாம்? தடுப்பூசிகளை கலந்து போடலாமா அல்லது புதிதாக ஒரு தடுப்பூசி போடலாமா போன்ற முடிவுகள் தேவை எழும்போதுதான் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

3 ஆம் டோஸ் போட்டால் கூடுதலான பாதுகாப்பு கிடைக்கும் என்ற ஆய்வு முடிவுகளை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள்  அதை போட திட்டமிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments