தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 14 பேர் கைது..!

0 12347

அசாமில் சமூக வலைத்தளத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாகப் பதிவிட்ட 14 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாலிபான்களை ஆதரித்தும், தாலிபான்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடாத ஊடகங்களை விமர்சித்தும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 17 பேர் மீது அசாம் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

மூவர் வெளிநாட்டிலும் வெளிமாநிலத்திலும் உள்ளதாகவும் 14 பேரைக் கைது செய்துள்ளதாகவும் டிஐஜி தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் மருத்துவக் கல்லூரி மாணவர் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments