நிலைத் தடுமாறி கீழே விழுந்த இளைஞர்கள் இருவர் மீது ஏறி இறங்கிய பேருந்து... கோர விபத்தின் பதைபதைப்பு காட்சி

0 4527

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம் சாலையை அவசர கதியில் கடந்த நபர் மீது மோதி நிலைத் தடுமாறியதில், கீழே விழுந்த இளைஞர்கள் இருவர் மீதும் பேருந்து ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பலியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காட்டாத்துறையைச் சேர்ந்த ஷாஜியும், பிரேம்குமாரும் பைக்கில் குழித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் களியக்காவிளை காவல் நிலையம் அருகே பேருந்தை வேகமாக முந்திச் செல்ல முயன்றனர். அப்போது அந்த பகுதியில் கடை நடத்தி வரும் நசீர் என்பவர் அவசர கதியில் சாலையைக் கடக்க முயற்சித்தார். அப்போது பைக் நசீர் மீது மோதி நிலைத்தடுமாறி இளைஞர்கள் இருவரும் கீழே சரிந்துவிழுந்தனர்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் இளைஞர்கள் மீது ஏறி, இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நொடிப் பொழுதில் பலியாகினர். சாலையை அவசர கதியில் கடந்த நசீர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments