இந்தியா-வங்கதேசம் இடையே வருகிற 22 தேதி முதல் தற்காலிகமாக விமான சேவை

0 1935

இந்தியா-வங்கதேசம் இடையே வருகிற 22 தேதி முதல் மீண்டும் தற்காலிக அடிப்படையில் விமான சேவை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்திலிருந்து டெல்லி, கொல்கத்தா, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு தற்காலிக அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக இந்தியா-வங்கதேசம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments