உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்எல்ஏ கார் மீது விவசாயிகள் தாக்குதல்

0 1966
உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்எல்ஏ கார் மீது விவசாயிகள் தாக்குதல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவின் கார் மீது விவசாயிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

முஸாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சிசவ்லி என்ற கிராமத்தில் பாஜக எம்எல்ஏ உமேஷ் மாலிக்கின் கார் சென்று கொண்டிருந்தது. இதையறிந்து அப்பகுதியில் குவிந்த பாரதிய கிஸான் யூனியன் என்ற விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள், எம்எல்ஏவின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலின் போது உமேஷ் மாலிக் காரில் இருந்தாரா? அவருக்கு ஏதும் காயமா என்ற தகவல் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments