தமிழ்நாட்டில் 14 தனியார் பல்கலைக்கழகங்கள் 102 பொறியியல் படிப்புகளை கைவிட்டுள்ளன - AICTE

0 24511

தமிழ்நாட்டில் உள்ள 14 தனியார் பல்கலைக்கழகங்கள், போதிய வரவேற்பு இல்லாததால் 102 பொறியியல் படிப்புகளை கைவிட்டுள்ளதாக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான AICTE தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என்று கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் உள்ள 16 பொறியியல் கல்லூரிகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 14 தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் போதிய வரவேற்பு இல்லாததால் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் சிவில், EEE, EIE, Power Electronics, Automobile Engineering, Nano Science and Technology உள்ளிட்ட 102 படிப்புகளை கைவிடுவதாக  தெரிவித்துள்ளதாகவும் AICTE தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments