வரும் 16 ஆம் தேதி முதல் சிறைகளில் கைதிகளை நேரடியாக சந்திக்கலாம் - சிறைத்துறை

0 1755
வரும் 16 ஆம் தேதி முதல் சிறைகளில் கைதிகளை நேரடியாக சந்திக்கலாம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைதிகளை நேரடியாக சந்திக்கும் நடைமுறை வரும் 16 ஆம் தேதி முதல் மீண்டும் துவங்குவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி சிறைவாசிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் e-Prisons Visitors Management System அல்லது அந்தந்த சிறைகளின் தொலைபேசி மூலம் 24 மணி நேரத்திற்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர, காலை 9 முதல் மதியம் 2 மணி வரை ஒரு சிறைவாசியை 2 பேர் 15 நிமிடங்கள் வரை சந்திக்கலாம். அப்படி வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments