அதிமுக எம்எல்ஏக்கள் 10பேர் உள்ளிட்ட 200பேர் மீது வழக்குப் பதிவு

0 2874

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு முன் திரண்ட, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனையின் போது, சுகுணாபுரத்திலுள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள், பேரி கார்டுகளை தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அனுமதியின்றி கூடி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், கொரோனா தொற்று பரவும் விதத்தில் செயல்படுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 10 அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடந்த போது அத்துமீறி உள்ளே நுழைய முயன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் முன்னாள் எம்பி வெங்கடேஷ் பாபு உள்ளிட்ட 10 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments