சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிரந்தர வைப்பு தொகை மோசடி செய்த விவகாரத்தில் 9 பேர் கைது

0 2032
சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிரந்தர வைப்பு தொகை மோசடி செய்த விவகாரத்தில் 9 பேர் கைது

சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் 9 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

சென்னை துறைமுக நிர்வாகம், கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில், 100 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தியது. வைப்புத் தொகை செலுத்திய மூன்று நாட்களில், 100 கோடி ரூபாய், இரு வேறு நடப்பு கணக்குகளுக்கு மாற்றப்பட்டன.

கணேஷ் நடராஜன் என்பவர், துறைமுக துணை இயக்குனர் எனக் கூறி, போலி ஆவணங்கள் வாயிலாக 45 கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. துறைமுக அதிகாரிகள் அளித்த புகாரில், இந்தியன் வங்கி அதிகாரி சேர்மதி ராஜா, துறைமுக அதிகாரி போல் நடித்து மோசடி செய்த கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி ஆகியோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக கடந்த 27ம் தேதி 22 இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், 9 பேரை கைது செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments