வங்காளதேசத்தில் 4 இந்துக் கோவில்கள், 10 சிலைகள், கடை, வீடுகள் சூறையாடல்

0 2738

வங்காளதேசத்தில் இந்து கோவில்களில் புகுந்து 10 சிலைகளை அடித்து நொறுக்கிய சமூக விரோத கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

குல்னா மாவட்டம் Rupsha Upazila அடுத்த சியாலி கிராமத்தில் புகுந்த மர்ம கும்பல் 4 இந்து கோவில்களில் 10 சிலைகளை சேதப்படுத்தியும், அருகில் இருந்த 6 கடைகள் மற்றும் 2 வீடுகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் Sheikhpura, Bamandanga மற்றும் Chadpu பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments