உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 350க்கு மேற்பட்ட ஊர்களை சூழ்ந்த வெள்ளம்

0 2024

உத்தரப் பிரதேசத்தில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 350க்கு மேற்பட்ட ஊர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வட மாநிலங்களில் கங்கை, யமுனை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் கங்கையில் அபாய அளவுக்கு மேல் 2 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பாய்கிறது. உத்தரப்பிரதேசத்திலும் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்ததால் பிற ஆறுகளிலும் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது.

இதனால் 21 மாவட்டங்களில் மொத்தம் 357 ஊர்களுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்துள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நிலைமையைத் தீவிரமாகக் கவனிப்பதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகளைச் செய்யும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments