கர்நாடகாவில் 9, 10, 11,12 வகுப்புகளுக்குப் ஆகஸ்டு 23 முதல் பள்ளிகள் திறப்பு - பசவராஜ் பொம்மை

0 2285
கர்நாடகத்தில் 9 முதல் 12 வரையான வகுப்புகளுக்குப் பள்ளிகளை ஆகஸ்டு 23 முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் 9 முதல் 12 வரையான வகுப்புகளுக்குப் பள்ளிகளை ஆகஸ்டு 23 முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் கலந்துரையாடிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 9 முதல் 12 வரையான வகுப்புகளில் மாணவர்களை இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவுக்கு மூன்று நாள் என்கிற கணக்கில் பாடம் கற்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

1 முதல் 8 வரையான வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆகஸ்டு இறுதி வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments