கொரோனாவுக்கு பின் ஏற்படும் உடல் பிரச்சினைகள்? மருத்துவர்கள் தரும் தீர்வுகள்..!

0 2716
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்கு பின் சந்திக்கும் உடல் பிரச்சினைகள் குறித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அரசு மருத்துவர்கள், பொது மக்களிடம் கலந்துரையாடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்கு பின் சந்திக்கும் உடல் பிரச்சினைகள் குறித்து சென்னை  அரசு ஸ்டான்லி மருத்துவமனை அரசு மருத்துவர்கள், பொது மக்களிடம் கலந்துரையாடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு வந்தவர்களின் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை கேட்டறிய, பிந்தைய கால தொடர் சிகிச்சை முறையானது நடைமுறையில் இருந்து வருகிறது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனாவுக்கு பிந்தைய கால தொடர் சிகிச்சை முறையினை, அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களை, செல்போனில் தொடர்பு கொள்ளும் மருத்துவர்கள், தொற்றுக்கு பிந்தைய காலத்தில், உடலில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வையும் வழங்கி வருகின்றனர்.

அரசு மருத்துவரிடம் பேசிய பெண் ஒருவர், கொரோனா பாதிப்புக்கு பின் ஒரு மாத காலமாக படபடப்பாகவும், மூச்சு திணறல் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் மற்றொரு பெண் மன நோய், தூக்கமின்மை, காரணமின்றி பயம் ஏற்படுதல், முடி உதிர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்...

மருத்துவர்கள் அளிக்கும் ஆலோசனைகள் நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வந்தோருக்கு பயனளிப்பதுடன், உடல்நலம் குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்பது உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments