பெகாசாஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டவர்கள் யார் யார்?

0 3044
பெகாசாஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டவர்கள் யார் யார்?

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர், முன்னாள் தேர்தல் ஆணையர் லாவாசா,மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்ணவ், பிரபல வைராலஜிஸ்ட் ககன்தீப் காங்  உள்ளிட்டோர் உள்ளதாக சில சர்வதேச பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

ராகுல் காந்தி 2018 ல் காங்கிரஸ் தலைவராக இருந்த போதும், கடந்த பொதுத் தேர்தலின் போதும் அவர் பயன்படுத்திய 2 மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாக்., பிரதமர் இம்ரான் கான் சில இந்திய பத்திரிகையாளர்கள், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்த உச்ச நீதிமன்ற பெண் ஊழியரின் குடும்பத்தினரின் பெயர்களும் உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த உளவு நடவடிக்கைளுக்குப் பின்னால் இந்திய அரசு உள்ளது என்ற தகவலை மத்திய ஐ.டி அமைச்சகம் மறுத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments