கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி

0 4106
கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் வென்று அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தென் அமெரிக்க கால்பந்து அணிகளுக்கு இடையிலான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் வென்று முறையே அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

ரியோ டி ஜெனிரோ மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் நடப்பு சாம்பியன் பிரேசில், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.

முதல் பாதியின் 22-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் Ángel Di María கோல் திருப்பி அணியின் புள்ளி கணக்கை தொடங்கி வைத்தார். பதில் கோல் திருப்ப எடுத்த பிரேசில் வீரர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின.

இறுதியில் 1-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் அர்ஜெண்டினா வென்று 15-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments