ஆண் நண்பருடன் ரிசார்ட்.. மதுவில் மயக்க மருந்து... சிறுமிக்கு இன்ஸ்டாவில் வந்த வில்லங்கம்..!

0 4811
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ஆண் நண்பருடன் ரிசார்ட்டுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சென்னையில் தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்வதாக தாயிடம் பொய் சொல்லிவிட்டு ஆண் நண்பருடன் ரிசார்ட்டுக்கு சென்றதாக கூறப்படும் 17வயது சிறுமி, மதுவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பழகியவனை நம்பி ரிசார்ட்டுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.... 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தாயின் பராமரிப்பில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அன்று தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஈ.சி.ஆரிலுள்ள ரிசார்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறுமியின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், பதறிப்போன அவரது தாயார் மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்துள்ளார். இதனிடையே, திங்கட்கிழமை வீட்டுக்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததை கண்டு அவரது தாய் விசாரித்ததில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் தகவல் தெரிவிக்கவே போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் பயன்படுத்தி வந்த அந்த சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்வேத்தோஸ் என்பவன் பழக்கமாகியதாக கூறப்படுகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் கோவளத்திற்கு செல்லலாம் என பிளான் பண்ணியதாகவும் சொல்லப்படுகிறது. தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டம் எனக் கூறிவிட்டு வருமாறு ஸ்வேத்தோஸ் ஐடியா கொடுக்க, சிறுமியும் அவ்வாறே தாயிடம் பொய் சொல்லிவிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்டபடி சிறுமியை கோவளத்திற்கு அழைத்துச் சென்ற ஸ்வேஸ்தோஸ் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்க வைத்ததோடு, சிறுமிக்கு மதுவில் மயக்க மருந்து கலக்கிக் குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி சுயநினைவின்றி தள்ளாடிய நிலையில், தனது நண்பர்கள் இருவரை ரிசார்ட்டுக்கு வரவழைத்த ஸ்வேத்தோஸ் அவர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சொல்லப்படுகிறது.

திங்கட் கிழமை காலை எழுந்து பார்த்த சிறுமி, ரிசார்ட்டில் அவர் மட்டும் தனித்து விடப்பட்டதையும், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதையும் உணர்ந்து வீட்டிற்கு வந்து தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் புகார் தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் ஆண் நண்பராக ஸ்வேத்தோஸை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, பதின்பருவத்தில் பார்ப்பதையெல்லாம் உண்மை என நம்பி சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கிறது இந்த சம்பவம்....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments