மாநகர மற்றும் நகரப்பேருந்துகளில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

0 3061
மாநகர மற்றும் நகரப்பேருந்துகளில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

ன்று முதல் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்படுகிறது.

மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கியது போல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று முதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர், திருநங்கைகள் ஆகியோர் உரிய அடையாள அட்டை காண்பித்து பேருந்துகளில் இலவச பயண சீட்டு பெற்று பயணிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிவப்பு நிறத்திலும், உதவியாளருக்கு நீல நிறத்திலும், திருநங்கைகளுக்கு பிங்க் நிறத்திலும் இலவச பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments