காஷ்மீரில் காவல் ஆய்வாளர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை.. தொழுகை முடித்து வந்தவர் மீது நடத்திய கொடூரம்..!

0 2453

காஷ்மீரில் சிஐடி பிரிவு காவல் ஆய்வாளரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான கனிபோராவைச் சேர்ந்தவர் பெர்வேஸ் அகமது தர். இவர் பரிம்போரா பகுதியில் காவல் நிலையத்தில் சிஐடி பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று பணி முடிந்து பெர்வேஸ் தனது வீட்டுக்குத் திரும்பும் வேளையில் நவ்காமில் உள்ள மசூதியில் மாலை தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பெர்வேஷை சரமாரியாகச் சுட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து நவ்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments