டெல்லியில் பொதுத்துறை வங்கி சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் வங்கியிலிருந்த 55 லட்சம் ரூபாய் கொள்ளை

0 2240
டெல்லியில் பொதுத்துறை வங்கி சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் வங்கியிலிருந்த 55 லட்சம் ரூபாய் கொள்ளை

டெல்லியில் வங்கிச் சுவரில் துளையிட்ட மர்ம நபர்கள் வங்கியிலிருந்த 55 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஷஹ்தாரா என்ற இடத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை அமைந்துள்ளது. இந்த வங்கியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் செலுத்திய  பணத்தை வைத்திருந்தனர்.

நேற்று வங்கியைத் திறந்த போது பணம் வைக்கும் அறை சுவரில் துளையிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காவலர்கள் நடத்திய விசாரணையில், பக்கத்து கட்டடத்தில் இருந்து சுவரில் துளையிட்டது தெரியவந்தது. வங்கியில் இருந்த 55 லட்சம் ரூபாய் கொள்ளை போன நிலையில் மற்றொரு அறையில் இருந்த நகைகள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments