81 நாட்களுக்குப் பிறகு முதன் முறையாக நாட்டில் கொரானா பாதிப்பு 60,000 க்கும் குறைவாக பதிவு..!

0 4261

81 நாட்களுக்குப் பிறகு முதன் முறையாக நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழே வந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 419 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 576 ஆக பதிவானது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்த 87 ஆயிரத்து 619 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொற்று பாதித்த 7 லட்சத்து 29 ஆயிரத்து 243 பேர் மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளனர்.

இது வரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 66 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளாவில் 12,443 பேருக்கு தொற்று ஏற்பட்டு முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 8 ஆயிரத்து 912 பேருக்கும், தமிழ்நாட்டில் 8ஆயிரத்து 183 பேருக்கும் தொற்று உறுதியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments