மனைவியை வைத்து யூடியூப்பில் கோடிகளை வாரிச்சுருட்டிய மதன்…! ரசிகர்களிடம் வசூல் மோசடி அம்பலம்..!

0 11734
அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப்பில் ஆபாச வர்ணனையோடு லைவ் செய்த மதன், வேறொரு பெண் போல தனது மனைவியையே ஆபாசமாக பேசவைத்து பதின்பருவ சிறுவர்களை கவர்ந்ததோடு, ஏழை நோயாளிகளுக்கு உதவும் வள்ளல் போல பேடீம் மற்றும் கூகுல் பே மூலம் லட்சக்கணக்கில் நிதி திரட்டி, கோடிகளை சுருட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப்பில் ஆபாச வர்ணனையோடு லைவ் செய்த மதன், வேறொரு பெண் போல தனது மனைவியையே ஆபாசமாக பேசவைத்து பதின்பருவ சிறுவர்களை கவர்ந்ததோடு, ஏழை நோயாளிகளுக்கு உதவும் வள்ளல் போல பேடீம் மற்றும் கூகுல் பே மூலம் லட்சக்கணக்கில் நிதி திரட்டி, கோடிகளை சுருட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய மாநில அரசுகளையோ, அரசியல்வாதிகளையோ எதிர்த்து ஒருவன் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் மிரட்டும் தோரணையுடனும் பேசி வீடியோ பதிவிட்டால் போதும் அடுத்த நொடியே அவன் யார் ? அவனது பின்னணி என்ன ? என்பது தெரியாமல் கண்மூடித்தனமாக அவனை பின் தொடரும் வாய்சொல் வீரர்களின் ஆதரவால் குறுகிய காலத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களுடன் யூடியூப்பில் பிரபலமடைந்த சேலத்தை சேர்ந்த யூடியூப்பர் மதன் இவன் தான்..!

டாக்சிக் மதன், மதன் ஓபி ஆகிய இரு யூடியூப் சேனல்கள் மூலம் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக யூடியூப்பில் லைவ்வாக விளையாடியதோடு அதில் வர்ணனையாக தொடர்ந்து நாகூசும் வார்த்தைகளால் பெண்களை ஆபாசமாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினான். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னை புளியந்தோப்பு போலீசார் சேலத்தில் மதனின் வீட்டுக்குச்சென்று அவரது மனைவி கிருத்திகா மற்றும் மதனின் தந்தை மாணிக்கம் ஆகியோரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிருத்திக்காவை கைது செய்த போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வருகிற 30ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

மதன் தனது யூடியூப் சேனலில் தனது பள்ளி பருவ புகைப்படத்தை போட்டோஷாப் செய்து புரொபைல் டிபியாக வைத்திருந்த நிலையில், தற்போது தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் புகைப்படங்களையும், அவர்களது வங்கி கணக்கு விவரங்கள், உள்ளிட்டவற்றையும் போலீசார் கைப்பற்றினர். இதில் அவன் இந்த ஆபாச விளையாட்டு சேனலை பயன்படுத்தி மாதந்தோறும் நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து மதனின் மனைவி கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

இரு வருடத்துக்கு முன்பு பப்ஜி கேமுக்கு அடிமையான சென்னையை சேர்ந்த சாப்ட்வெர் என்ஜினியரான கிருத்திகாவை காதல் வலையில் வீழ்த்திய மதன், முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் குடித்தனம் நடத்தியுள்ளான். சேலத்துக்கு அழைத்துச்சென்று கணவன் மனைவியாக வாழ்ந்துவந்த இந்த ஜோடிக்கு 8 மாத குழந்தை உள்ளதாக கூறப்படுகின்றது.

கிருத்திகாவுக்கு கேமிங்கில் அதிக விருப்பம் இருந்ததால் அவளது ஐடியாபடி, கொரியன் கேம் பலவற்றை வி.பி.என் சர்வர் மூலம் பதிவிறக்கம் செய்து யூடியூப்பில் மதனை, லைவாக விளையாடவைத்து பதிவேற்றம் செய்துள்ளார். தான் பேசும் ஆபாச வார்த்தைகளை கேட்டு ரசிக்கும் பெண்ணாக தனது மனைவியையே பேச வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரவு இன்ஸ்டா கிராம் சாட்டிங்கில் பேசலாம் என்கூறி இதனை பார்க்கும் மற்ற பதின்பருவ சிறுமிகளையும், சிறுவர்களையும் தனது கேமிங் சேனலுக்கு அடிமையாக்கியுள்ளான்.

அத்தோடு தன்னை ஒரு சமூக அக்கறை கொண்ட வள்ளல் போல காட்டிக் கொண்டு தினமும் லைவில் ஏதாவது ஏழை நோயாளிக்கு உதவுவது போல பேடீம் மற்றும் கூகுல் பே எண்களை வழங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளான். அதில் சல்லிக்காசு கூட எவருக்கும் இதுவரை உதவியதில்லை என்று தெரியவந்துள்ளது. மாறாக அவனை யூடிப்பில் வள்ளல் போல புகழ்வதற்காக இவனுடன் விளையாடும் சில நபர்களுக்கு மாதந்தோறும் நல்ல தொகை ஒன்றை சம்பளமாக கொடுத்துள்ளான். அதில் மனைவியின் ஏற்பாட்டின் பேரில் 4 இளம் பெண்களும் விளையாடியது தெரியவந்துள்ளது.

கிருத்திகா வீட்டில் இருந்தே மென்பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் விளையாடும் கேடி மதனின் வங்கி கணக்கிலும், கிருத்திகாவின் வங்கி கணக்கிலும் கோடிக்கணக்கில் பணம் இருப்பு உள்ளதையும், அப்படி ஏமாற்றி வசூலித்த தொகையில் 3 ஆடி கார்களை வாங்கியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த யூடியூப் விளையாட்டு மோசடியில் ஈடுபட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைவசம் இருக்கும் திமிறில் தான் மத்திய, மாநில அரசுகளையும் மற்ற யூடியூப்பர்களையும் அருவெறுக்கத்தக்கவகையில் பேசிவந்துள்ளான் மதன்... அவனது இரு யூடியூப் சேனல்களுக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது முதல்., அட்மினாக இருந்து ஏராளமான வசதியான வீட்டுப் பெண்களிடம் மதனை பேசவைத்து அதன் மூலம் பணம் பறிப்பில் ஈடுபட்ட கிருத்திகாவையும், அவர்களது மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த மதனின் தந்தை மாணிக்கத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவனது இரு ஆபாச யூடியூப் சேனல்களை போல கோடி கணக்கில் மோசடியாகப் பெற்ற நன்கொடை பணம் உள்ள அவர்களது இரு வங்கிகணக்குகளையும் முடக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தான் போலீசில் சிக்கி ஜெயிலுக்கு சென்று வந்தால் தனது ஆட்டம் மூர்க்கதனமாக இருக்கும் என்று மிரட்டி இருந்த மதனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் அவனை புகழ்ந்து மார்கெட்டிங் செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்த பப்ஜி டோம்னிக் உள்ளிட்ட மற்ற கூட்டாளிகளையும் தங்கள் விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments