வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சந்தேகத்திற்குரிய விதமாக அத்துமீறி நுழைய முயன்ற சீன நாட்டவர் கைது

0 2710
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சந்தேகத்திற்குரிய விதமாக அத்துமீறி நுழைய முயன்ற சீன நாட்டவர் கைது

ங்காளதேசத்தில் இருந்து மேற்குவங்காள எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் சந்தேகத்திற்குரிய விதமாக அத்துமீறி நுழைய முயன்ற சீன நாட்டவரை எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தின் மால்டா எல்லைப் பகுதி வழியாக நுழைய முயன்ற அவரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 35 வயதான அந்த நபர் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்பதால் அவரை கைது செய்து காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் இருந்து லேப்டாப், 3 செல்போன்கள், வெளிநாட்டு பணம் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments