மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

0 2936

துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்த செய்திக் குறிப்பில், கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், எந்த ஒரு பணிகளும் நடைபெறாமல் இருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர், பணிகளை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முழு அதிகாரங்களையும் வழங்கி விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments