சசிகலா அதிமுக கட்சியிலேயே இல்லை : வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது - எடப்பாடி பழனிசாமி

0 6602

சிகலா அதிமுகவில் இல்லை, அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து விட்டார் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதற்காக சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க 3 முதல் 4 நாட்கள் ஆவதாகவும், ஒரே நாளில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்து விட்ட சசிகலாவின் பெயரில், வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதாக, ஆடியோ வெளியாவதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments