சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த படுகொலையின் 32 ஆவது நினைவு அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக ஆர்வலர் சோ ஹாங்-துங் கைது

0 2090
சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த படுகொலையின் 32 ஆவது நினைவுநாள்; நினைவு அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக ஆர்வலர் சோ ஹாங்-துங் கைது

சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த படுகொலை தினத்தையொட்டி தடையை மீறி அஞ்சலி செலுத்த வந்த ஜனநாயக ஆர்வலர் சோ ஹாங்-துங்கை (Chow Hang Tung) போலீசார் கைது செய்தனர்.

கடந்த 1989ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயகம் அமல்படுத்தப்பட வேண்டும் என மாணவர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது அப்போதைய சீன அரசு தாக்குதல் நடத்தியது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் 32வது ஆண்டு தினத்தை முன்னிட்டு தியானன்மென் சதுக்கத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ஹாங்காங் நகரில் திரண்ட மக்கள், அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கு வந்த 37 வயதான ஜனநாயக ஆர்வலர் சோ ஹாங்-துங்கை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments