காரில் வந்து கைவரிசை காட்டிய தம்பதி..! ஆடு திருட்டில் அப்டேட்டட் வெர்சன்

0 6631

சென்னை கொரட்டூர் அருகே ஊரடங்கை பயன்படுத்தி காரில் கைக்குழந்தையுடன் வந்து 2 ஆடுகளை திருடும் தம்பதியரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கொரட்டூர் போதியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் இந்திராணி என்பவர் வீட்டின் முன் கட்டிப் போட்டிருந்த 2 ஆடுகளை காணவில்லை என புகார் அளித்திருந்தார்.

இதனை அடுத்து கொரட்டூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் வந்த கணவன், மனைவி இருவரும் ஆடுகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து காரின் பதிவு எண் மூலம் அந்த தம்பதியர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments