மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு..! உத்தவ் தாக்கரே அரசு அறிவிப்பு

0 4395

காராஷ்ட்ராவில் இன்றுமுதல் ஊரடங்கு தளர்த்தப்படும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு ஊரடங்கு நீடிப்பதாக அறிவித்துள்ளது.

36 மாவட்டங்களில் 18 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்குத் தளர்த்தப்படுவதாக அம்மாநிலத்தின் அமைச்சர் விஜய் வாடேட்டிவர் அறிவித்திருந்த நிலையில் ஊரடங்கு நீடிப்தாக மராட்டிய அரசு திடீரெனஅறிவித்துள்ளது.

பல கிராமப்புற பகுதிகள் வரை கொரோனா நோய்த்தொற்று பரவியிருப்பதால் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்தும் நிலைமை இல்லை என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் பரிசீலனையில் இருப்பதாகவும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இறுதி முடிவு எடுப்பார் என்றும் இது குறித்த குழப்பத்திற்கு மராட்டிய அரசுவிளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments