ஆர்டர் செய்ததோ செல்போன்..! வந்து சேர்ந்ததோ வெங்காயம்..! இமாச்சலபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

0 2314
ஆர்டர் செய்ததோ செல்போன்..! வந்து சேர்ந்ததோ வெங்காயம்..! இமாச்சலபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மாச்சலபிரதேசத்தில் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு வெங்காயத்தை அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது.

அனு கிராமத்தைச் சேர்ந்த சசி தாக்கூர் என்பவர் சில தினங்கள் முன்பு இணையதளம் மூலம் ஒரு பிரபல நிறுவன செல்போனுக்கு ஆர்டர் கொடுத்தார். அந்த செல்போனின் விலையான 15 ஆயிரம் ரூபாய் கட்டணத்தையும் கிரெடிட் கார்டு மூலம் அவர் செலுத்தினார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு வந்த செல்போன் பெட்டி பார்சலை பிரித்து பார்த்த போது செல்போனுக்கு பதிலாக வெங்காயங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக குருகிராமில் உள்ள அந்த செல்போன் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்து விட்டு செல்போன் வரும் என்று பரிதாபமாக காத்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments