இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவு

0 4931
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவு

கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 427 பேருக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டது. இறப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 511 ஆக குறைந்துள்ளது.

3  லட்சத்து 26 ஆயிரத்து 850 பேர் நோயில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 25 லட்சத்து 86 ஆயிரத்து 782 பேர் தொற்று பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளனர்.

மொத்த இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை 19 கோடியை 85 லட்சத்து 38 ஆயிரத்து 999 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments