கொரோனா 3 ஆம் அலை வீசினால் சிறார்களுக்கு பாதிப்பு இருக்குமா? எய்ம்ஸ் இயக்குநர் ஆறுதல் தகவல்

0 7488
கொரோனா 3 ஆம் அலை வீசினாலும், அதனால் சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா 3 ஆம் அலை வீசினாலும், அதனால் சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா முதல் அலை வயதானவர்களையும், இரண்டாம் அலை இளைஞர்களையும் தாக்கிய நிலையில், 3 ஆம் அலை வீசினால் அது சிறார்களை அதிகமாக தாக்கும் என்ற அச்சம் உருவாகி உள்ளது.

இந்தியாவில் 14 வயதுக்கு குறைவானவர்கள், மக்கள் தொகையில் 26 சதவிகிதமும், 5 வயதிற்கு குறைவானவர்கள் சுமார் 7 சதவிகிதமும் உள்ளனர்.

ஆனால் 3 ஆம் அலை சிறார்களுக்கு பாதகமாக இருக்கும் என்பதற்கு உண்மை சான்றுகள் எதுவும் இல்லை என குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

அதே நேரம் கொரோனா காலகட்டம் காரணமாக மன அழுத்தம், ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருப்பது மற்றும் கற்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக சிறார்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments