தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்துக்கு குறைவாக நீடிக்கிறது - சுகாதார அமைச்சகம்

0 1625

24 மணி நேரத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 70 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை பலனின்றி 3 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்து 69 ஆயிரம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

வைரஸ் தொற்று பாதித்து 31 லட்சத்து 29 ஆயிரத்து 878 பேர் மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். இதுவரை நாட்டில் தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது. 18 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 792 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments