"வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு" -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0 6251
"வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு" -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ங்கக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22ம் தேதி, வடக்கு அந்தமான் கடலுக்கும், வங்கக் கடல் பகுதிக்கும் இடையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் பின், அது படிப்படியாக தீவிரமடைந்து, வருகிற 25ந்தேதி புயலாக மாறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Yaas என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய புயலானது ஓடிசாவுக்கும் மேற்கு வங்காளத்திற்கும் இடையே வருகிற 27ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments