தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்

0 3144
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வருகிற 21-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வருகிற 21-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தென்மேற்கு பருவமழை வருகிற 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்தியகிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், இதனால் தமிழகத்திற்கு பெரிய தாக்கம் மற்றும் பாதிப்பு அல்லது மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments