கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உ.பி. அமைச்சர் உயிரிழப்பு

0 3236
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த உத்தரபிரதேச மாநில அமைச்சர் விஜய் காஷியப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த உத்தரபிரதேச மாநில அமைச்சர் விஜய் காஷியப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 56. முசபார்நகரின் சர்தாவால் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான விஜய் காஷியப், அம்மாநிலத்தின் வருவாய்த்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதித்து குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்தார். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலையில், உத்தரபிரதேச அமைச்சர்கள் கமல் ராணி வருண், சேத்தன் சவுகான் ஆகிய இருவரும் நோய்த்தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments