உதவ முன்வாருங்கள்.. தொழில்நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு..!

0 2996
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருத்துவ தேவைக்கும் தாராளமாக உதவ முன்வரவேண்டும் என தொழில்நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருத்துவ தேவைக்கும் தாராளமாக உதவ முன்வரவேண்டும் என தொழில்நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

கொரோனா காலத்தில் தொழில்துறையின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். Hyundai, Ashok Leyland, Saint Gobin, Renault, Daimler, TVS, India Cements, Sanmar Group, Bannari Amman உள்ளிட்ட 12 நிறுவனங்களின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு பெருந்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கானொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு காரணியாகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு தீர்வல்ல எனவும் முதலமைச்சர் கூறினார். அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடையின்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அத்தகைய தொழில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தற்போது, தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 519 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்ற முதலமைச்சர், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிப்காட் மற்றும் தொழில்நிறுவனங்கள் மூலம் 7500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். சிங்கப்பூரில் இருந்து ஏற்கனவே விமானம் மூலம் 500 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மேலும் 1500 சிலிண்டர்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

தேசிய நெடுஞ்சாலை துறையுடன் டி.ஆர்.டி.ஓ. அமைப்பு இணைந்து 142 மினி ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், தொழில்நிறுவனங்கள் மூலம் 13 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments