கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நாளை கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1497
கொரோனா தடுப்புப் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை செல்லவுள்ளார்.

கொரோனா தடுப்புப் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை செல்லவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக நாளை காலை 11 மணிக்கு கோவை செல்லவுள்ள முதலமைச்சர், அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்ந்து, கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 250 படுக்கைகள் உடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments