பெங்களூருவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த 4 பேர் கைது

0 981
பெங்களூருவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த 4 பேர் கைது

பெங்களூருவில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் பசவேசுவராநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்ற சுனில், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 பாட்டில் ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல், எஸ்.ஜே. பார்க் பகுதியிலும் ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்தை 20ஆயிரம் ரூபாய்க்கு விலை வைத்து விற்பனை செய்த 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 பாட்டில் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments